Tuesday, April 26, 2016

10. அமுதைக் குழைத்து(அமுதத் தமிழில்)Dedicated to M.S.VM.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)

அமுதைக் குழைத்தே இசையாய்க்-கொடுத்தாய் இசையின் தலைவன்-நீ
.. .. 
அமுதைக் குழைத்தே இசையாய்க்-கொடுத்தாய் இசையின் தலைவன்-நீ 
தமிழ்த் திரையில்-இசையால் புதுமை-படைத்தே புரட்சி புரிந்தாய்-நீ ஆட்சி புரிந்தாய்-நீ
அமுதைக் குழைத்தே இசையாய்க்-கொடுத்தாய் இசையின் தலைவன்-நீ 
வகுப்பில் தமிழின் பெருமை படித்தோம் அதனை அழகாய்-நீ (2)
உனதிசையில்-மெழுகி இதமாய்க்-கொடுத்தாய் அதுதான் MSV அடடா MSV 
(MUSIC)
சோகம் வரும்பொழுதுன் பாடல் உட்-புகுந்து வருடிக் கொடுப்பதென்ன (2) 
இசையில் முழுக-வைத்து நெஞ்சை மயங்க-வைத்துத் 
திருடிக் கொண்டதென்ன .. கொள்ளை  கொண்டதென்ன 
நாதம் இசைத்துக்-கள..வாடும்-உன்னிடமே நெஞ்சம் இருப்பதென்ன (2)
கள்ளன் உனக்கும்-சிறைப் படுத்தத் தனித்த-அதி..காரம் கொடுத்ததென்ன
ஐயா .. ஞாயம்.. என்ன..
அமுதைக் குழைத்தே இசையாய்க்-கொடுத்தாய் இசையின் தலைவன்-நீ 
இசையின் தலைவன்-நீ
(MUSIC)
எதுகை-மோனையுடன் கவிதை-தை-தை-என தனித்தே ஆடட்டுமே (2)
உனது இசை-இணைய தனித்த நிலை-மறைய ரெண்டும்-சேர்ந்ததுமே இதமாய்த் தோன்றிடுமே
உந்தன் இசை-புகுந்த எந்தன் நிலை-மறந்தப் பித்தன் எனைப்-போலவே
மண்ணில்-எண்ணிறந்த பேர்கள் தன்னின்-கதை சொன்னால் யுகம்-போகுமே
அய்யா.. யுகம்-போகுமே
அமுதைக் குழைத்தே இசையாய்க்-கொடுத்தாய் இசையின் தலைவன்-நீ 
தமிழ்த் திரையில்-இசையால் புதுமை-படைத்தே புரட்சி புரிந்தாய்-நீ ஆட்சி புரிந்தாய்-நீ
அமுதைக் குழைத்தே இசையாய்க்-கொடுத்தாய் இசையின் தலைவன்-நீ
Monday, April 25, 2016

9. சாதல் ஏதுந்தன் இசைக்கு(காதல் ராஜ்ஜியம் எனது)
Dedicated to M.S.VM.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)

சாதல் ஏதுந்தன் இசைக்கு எந்த-நாளும் உன்னிசை-உளது
இசை-மன்னன் நீ-உந்தன் இசைக்கு ஒரு-போதும் முடிவெங்கு-உளது
(SM)
(2)
சொல்லாத பாடங்கள்-பலது மன்னா-உன் பாடலில்-உளது 
நாத-தேவனின் உருவே-நீ வந்து-செய்யாத பாட்டென்ன-உளது
(2)
சாதல் ஏதுந்தன் இசைக்கு எந்த-நாளும் உன்னிசை-உளது
இசை-மன்னன் நீ-உந்தன் இசைக்கு ஒரு-போதும் முடிவெங்கு-உளது
(MUSIC)
துன்பம் வரும்-நெஞ்சில் புதுத் தென்றல்-எனப்-பண்ணில் 
ஆறாய்-உன்..னிசை-பாயுது 
தை-தை-என ஆடும்-எழில் மங்கை-என-உவகை 
தான்-பெற்று நெஞ்சாடுது
(2)
எந்நாளும் சங்குக்கு-வெளுப்பு 
சுட்டாலும் சிறப்பென-இருக்கு
சங்கு போல-உன் இசைதானோ 
காலம் சென்றாலும் முழங்குது-சிறந்து
சாதல் ஏதுந்தன் இசைக்கு எந்த-நாளும் உன்னிசை-உளது
இசை-மன்னன் நீ-உந்தன் இசைக்கு ஒரு-போதும் முடிவெங்கு-உளது
(MUSIC)
என்றும் இசை-வாழும் அதில்-இன்பம் உருவாக்கும் 
ஊற்றாகும் சப்த-ஸ்வரம் 
பாடல் எனும்-கிண்ணம் தனில்-பித்தம் தரும்-வண்ணம் 
தந்தாய்-நீ எங்கள்-வரம்
ஐயா-உன் பைத்தியம் எனக்கு 
உன்-கீதமே அதன் மருந்து
இசையின்-தேவதை அலங்காரம் 
செய்து கொண்டாளோ உன்னிடம் பிறந்து
சாதல் ஏதுந்தன் இசைக்கு எந்த-நாளும் உன்னிசை உளது
இசை மன்னன் நீ-உந்தன் இசைக்கு ஒரு-போதும் முடிவெங்கு உளது
Sunday, April 24, 2016

8 நாளொரு புதுமை (நானொரு குழந்தை)

Dedicated to M.S.VDedicated to M.S.V
M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)

Thanks to Ullagaram Ravi for beautifully singing this song.
Please visit his youtube channel for his Karaoke songs.
_____________________________

நாளொரு-புதுமை தனியொரு-இனிமை என்று-உன்னிசை திகழுதய்யா 
தேனினும்-இனிமை என்றதன்-பெருமை தன்னை-உலகமும் புகழுதய்யா
(1+SM+1)
(MUSIC)
நேற்றிசை-கேட்டேன் இன்றிசை-கேட்டேன் உன்னிசை போல்-எங்கும் கிடையாது
(1+SM+1)
அனுதினம்-சோதனை தந்திடும்-வேதனை உன்னிசை-கேட்டால் தெரியாது (2)
துவளும் மனம் தானாய் 
துள்ளும் அது மானாய் 
உந்தன் இசைத்தேனாய் 
உண்டவுடன் காணாய்
நாளொரு-புதுமை தனியொரு-இனிமை என்று-உன்னிசை திகழுதையா 
தேனினும்-இனிமை என்றதன்-பெருமை தன்னை-உலகமும் புகழுதய்யா
 (MUSIC)
உனையறியாமலுன் இசையறியாமல் யாரிருக்கார் இந்த நாட்டுக்குள்ளே
(SM)
கோடி தந்தாலும் தேடிச் சென்றாலும் யார் கொடுப்பார் உன்போல் பாட்டுக்களை 
பூமி-களித்திட நாளும்-இசைத்தே நீயும் தந்தாய்த்-தேன் பாட்டுக்களை (2)
துவளும் மனம் தானாய் 
துள்ளும் அது மானாய் 
உந்தன் இசைத்தேனாய் 
உண்டவுடன் காணாய்
நாளொரு-புதுமை தனியொரு-இனிமை என்று-உன்னிசை திகழுதையா 
தேனினும்-இனிமை என்றதன்-பெருமை தன்னை-உலகமும் புகழுதய்யா

Thursday, April 21, 2016

7. தேனாய் இசைதரும் (நிலவே என்னிடம் மயங்காதே)
Dedicated to M.S.VM.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)

தேனாய் இசைதரும் பெருமானே நீ-அளிக்கும் இசைபோல் வேறில்லை (2)
ஆஹா அது-தரும் இதம்போலே-வே..றெதுவும் மனதில் தரவில்லை
தேனாய் இசைதரும் பெருமானே-நீ அளிக்கும் இசைபோல் வேறில்லை
(MUSIC)
ஜாடையில் உனைப்போல் பலர்-வரலாம் 
உன் ஞானத்தை அவரின் இசைதருமோ 
(2) 
மாலையில் பல-விளக்..கொளிர்ந்திடலாம் 
ஓராதவன் ஒளியை அவைதருமோ
தேனாய் இசைதரும் பெருமானே-நீ அளிக்கும் இசைபோல் வேறில்லை
(MUSIC)
உனைப்போல் இசை..யை யார்-அறிவார் (2) 
ஓர் மெல்லிசை விருந்தை யார்-படைப்பார் 
தேடிவிட்..டேன்-எங்கும் காணவில்லை ஓர்-சூரியன் அன்றோ இவ்வுலகே
தேனாய் இசைதரும் பெருமானே-நீ அளிக்கும் இசைபோல் வேறில்லை
(MUSIC)
அமைதியில்லாத நேரத்திலே (2) 
உந்தன் பாட்டினை ஓர்-முறை கேட்டுவிட்டால் 
நிம்மதி அடைந்தே நான்-மகிழ்வேன் 
என்று உலகில்-உன்னைத்..தான் புகழ்ந்திடுவார்
தேனாய் இசைதரும் பெருமானே நீ-அளிக்கும் இசைபோல் வேறில்லை
ஆஹா அது-தரும் இதம்போலே-வே..றெதுவும் மனதில் தரவில்லை
தேனாய் இசைதரும் பெருமானே-நீ அளிக்கும் இசைபோல் வேறில்லை

6. நீ என்னென்ன சொன்னாலும்(நீ என்னென்ன சொன்னாலும் )
Dedicated to M.S.VM.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)

நீ என்னென்ன சொன்னாலும் இசையே
*உன்னை தின்னென்று சொன்னாலும் இசையே
(2)
நீ என்னென்ன செய்தாலும் இசையே
உயிர்-மூச்சாகும் உனக்கந்த இசையே
(2) 
இசையே .. இசையே 
(MUSIC)
உந்தன்-இசையெனும் மழையினில்-நனைந்து (2)
உன்னைத் தஞ்சம்-என்று வழிபட அடைந்து (2)
உன்னை இசைதனின் இறையென அறிந்து (2) 
உன்னைத் தொழுகிறேன் கவிபல புனைந்து கவிபல புனைந்து
நீ என்னென்ன சொன்னாலும் இசையே
உன்னை தின்னென்று சொன்னாலும் இசையே
(MUSIC)
உந்தன் இசைதனில் பைத்தியம் பிடித்து (2)
ஏங்கும் மனத்துடன் வருந்துவர் தனக்கு
ஏங்கும் மனதுடன் வருந்துவர் தனக்கு 
என்றும் பயமிலை பயமிலைஅவர்க்கு 
ஒன்றும் பயமிலை என-அவர்..களுக்கு
உந்தன் இசையென இருக்குது மருந்து அது-அரு மருந்து
நீ என்னென்ன சொன்னாலும் இசையே
(MUSIC)
வெள்ளித் திரையினில் உன்னிசை-விருந்து 
வெற்றித் திரைப் படம் பலப்-பலக் கொடுத்து 
உள்ள கதையினை உரைப்பவர் தனக்கு
இந்த உலகமும் போகுது மறந்து நினைவுகள் பிறந்து
நீ என்னென்ன சொன்னாலும் இசையே
*உன்னை தின்னென்று சொன்னாலும் இசையே
நீ என்னென்ன செய்தாலும் இசையே
உயிர்-மூச்சாகும் உனக்கந்த இசையே
இசையே .. இசையே* Music is the food for MSV

Tuesday, April 19, 2016

5. மெலடியைக் குறிக்க (மதுரையில் பறந்த மீன் கொடியை)
Dedicated to M.S.V
M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)

Thanks to Ullagaram Ravi for beautifully singing this song.
Please visit his youtube channel for his Karaoke songs.
_____________________________

மெலடியைக்-குறிக்க முதலெழுத்..தாய்-நான் ‘எம்’மினைக்-கொள்வேனே 
பாட்டின் இனிமையைக்-குறிக்க ஸ்வீட்டெனும்-சொல்லை ‘எஸ்’ஸி னில் சொல்வேனே
(+SM+1)
வெர்சடைல்-என்றே விளங்குமுன்-இசையை ‘வி’எனச் சொல்வேனே (2)
இவை யாவும்-ஒன்றாய்த் தோன்றும்-இசையை MSV என்பேனே
உன்னை இசை-இறை என்பேனே
மெலடியைக்-குறிக்க முதலெழுத்..தாய்-நான் ‘எம்’மினைக்-கொள்வேனே 
பாட்டின் இனிமையைக்-குறிக்க ஸ்வீட்டெனும்-சொல்லை ‘எஸ்’ஸி னில் சொல்வேனே
(MUSIC)
பாடுதல்-அழகோ பாடல்-அழகோ இரண்டுக்கும் மேலுன் இசையழகோ
பாரதி-தாசன் அமுதெனச்-சொல்லும் தமிழழகோ-உன் இசையழகோ 
வேதத்தில்-ஒலிக்கும் சந்தத்தின்-இசைதான் மெல்லிசையாய்-நீ தந்ததுவோ சிந்துநதியின் மிசையின்-அழகு கவியினிலோ-உன் இசைதனிலோ
கவியினிலோ-உன் இசைதனிலோ 
மெலடியைக்-குறிக்க முதலெழுத்..தாய்-நான் ‘எம்’மினைக்-கொள்வேனே 
பாட்டின் இனிமையைக்-குறிக்க ஸ்வீட்டெனும்-சொல்லை ‘எஸ்’ஸி னில் சொல்வேனே
(MUSIC)
எதுகை-மோனை வார்த்தைகள்-அழகோ கவியினுக்கே-உன் இசையழகோ
(2) 
உவமைகள்-யாவும் ஒன்றெனத்-தோன்றும் உன்னிசை-போல்-வேறெதும் அழகோ 
இவை யாவும்-ஒன்றாய்த் தோன்றும் இசையை MSVஎன்பேனே
மெலடியைக்-குறிக்க முதலெழுத்..தாய்-நான் ‘எம்’மினைக்-கொள்வேனே 
பாட்டின் இனிமையைக்-குறிக்க ஸ்வீட்டெனும்-சொல்லை ‘எஸ்’ஸி னில் சொல்வேனே

4. இசை ஆண்டவனின் மூச்சு (ஒரு தாய் வயிற்றில் - உரிமைக் குரல்)Dedicated to M.S.V
M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)

Thanks to Ullagaram Ravi for beautifully singing this song.
Please visit his youtube channel for his Karaoke songs.
_____________________________இசை-ஆண்டவனின்-மூச்சு என-உரைப்பார் 
உந்தன் இசை-கேட்டால் நன்கு அது-புரியும் 
(2)
சோர்ந்த மனதினுக்கும் உந்தன் இசைப்-பாட்டால் 
புது உரம்-பிறக்கும் என்ற நிஜம்-புரியும் 
இசை-ஆண்டவனின்-மூச்சு என-உரைப்பார் 
உந்தன் இசை-கேட்டால் நன்கு அது-புரியும் 
(MUSIC)
நாளும்-அதிகாலை உந்தன் இசைப்-பாட்டு நாளை-இனிதாக்குமே
நாளின் பல-வேலை உந்தன் இசையோடு செய்ய-எளிதாகுமே
என்று-நான் உன்னிசை தன்னையே போற்றுவேன் 
உந்தன் இசையில்-கோர்த்து கவிதை-மாலை சாற்றுவேன்
இசை-ஆண்டவனின்-மூச்சு என-உரைப்பார் 
உந்தன் இசை-கேட்டால் நன்கு அது-புரியும் 
(MUSIC)
உனது-இசையோடு கூடி-என்-பாட்டு கூட-மெருகேறுது 
எனது சொல்-நாரும் உனது இசைப்-பூவைச் சேர்ந்து மணம்-வீசுது
மெல்லிசை என்பதே உன்னிசை தானையா 
பாலைச் சோலையாகும் உந்தன் இசையின் மழையினால்
இசை-ஆண்டவ..னின்-மூச்சு என-உரைப்பார் 
உந்தன் இசை-கேட்டால் நன்கு அது-புரியும் 
(MUSIC)
கண்கள்-குளமாகும் நெஞ்சம்-வளமாகும் உந்தன் இசையாலய்யா
கல்லைக்-கனியாக்கும் முள்ளை-மலராக்கும் உந்தன் இசைதானய்யா
(2)
ரசிகரின் பைத்தியம் தீர்த்திடும் வைத்தியம்
ஐயா உந்தன்-இசைதான் என்றும்-இதுதான் சத்தியம் (2)
இசை-ஆண்டவனின்-மூச்சு என-உரைப்பார் 
உந்தன் இசை-கேட்டால் நன்கு அது-புரியும் 

சோர்ந்த மனதினுக்கும் உந்தன் இசைப்-பாட்டால் 
புது உரம்-பிறக்கும் என்ற நிஜம்-புரியும் 
இசை ஆண்டவனின்-மூச்சு என-உரைப்பார் 
உந்தன் இசை-கேட்டால் நன்கு அது-புரியும் 

Wednesday, April 6, 2016

M.S.V. எனும் ஒரு சகாப்தம்(24 June 1928 – 14 July 2015)

6. நீ என்னென்ன சொன்னாலும்(நீ என்னென்ன சொன்னாலும் )

7. தேனாய் இசைதரும் (நிலவே என்னிடம் மயங்காதே)

8  நாளொரு புதுமை (நானொரு குழந்தை)  ** Recorded

9. சாதல் ஏதுந்தன் இசைக்கு(காதல் ராஜ்ஜியம் எனது)

10. அமுதைக் குழைத்து(அமுதத் தமிழில்)

11 தேன் மழை போலே (பூமழை தூவி) ** Recorded

12 என்னவென்று கூறிடுவேன் ( அந்தரங்கம் நானறிவேன்)

13 பேசுவது சரியா(பேசுவது கிளியா)

14 எம்.எஸ்.வி என்னும் மூன்றெழுத்து (தேவியர் இருவர் முருகனுக்கு)

15 யார் இருக்கார்(பூ முடிப்பாள்) ** Recorded

16 உன்னிசையில் முங்கித் திளைத்தேன்(உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்)

17 நொந்த இதயத்தின் உள்ளே (தங்கப்பதக்கத்தின் மேலே)

18 அருமையிலும் அருமை(பரமசிவன் கழுத்திலிருந்து)  ** Recorded

19 இசைப் பாட்டால்(இசை கேட்டால் புவி அசைந்தாடும்) ** Recorded

20 தெய்வமே தேர்ந்தெடுத்து (தெய்வத்தின் தேர்தெடுத்து) **

21 வேணுமோ இன்னும் வேணுமோ(நாணமோ இன்னும் நாணமோ) **

22 போடாத ராகம் உண்டோ (ஆடாத மனமும் உண்டோ)

23 அருவிகள் எனும்படி விழும்(அழகிய தமிழ் மகள் இவள்)

24    ஒண்ணுக்கொண்ணு அழகு (பொன்னுக்கென்ன அழகு)

25 ஒரு நாள் இல்லை (ஒருநாள் இரவு)

26 ரொம்ப நேரம் (கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்)

27 நாதம் உருவாகும் இறையோனிடம்(பார்வை யுவராணி கண்ணோவியம்)

28. தேன் போலே இனிக்கும்(வேலாலே விழிகள்)

29 அம்மாடி(அம்மானை)

30 இன்பம் வீசும்(புத்தன் ஏசு) **

31.மன்னா உ..னை-உரைக்க ஈடில்லையே(புல்லாங்குழல் கொடுத்த) **

32. அழகழகான பலராகம்(ஒளிமயமான எதிர்காலம்) ***

33. கொடுத்த இசை(வளர்ந்த கலை) **

34 சேய்கள் மறுக்காத(மலர்ந்தும் மலராத) **

35 உலகினிலா ஐயா நீ இருந்தாய்(மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்)

_________________________________________________________________

_________________________________________________________________

I loved these on MSV 

Blog posts by Mr Shaaji 
_________________________________________________________________

Click here for Similar Tribute to TMS 

_________________________________________________________________

3 செவியில்-ஒரு அமுதம் (உனக்கும் ஒரு காலம் உண்டு - சிவகாமியின் செல்வன்)

Dedicated to M.S.VM.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)

செவியில்-ஒரு அமுதம்-என்று உனதரும்-இசையே
(Short Music)
செவியில்-ஒரு அமுதம்-என்று உனதரும்-இசையே
துன்பத்திலும் இன்பம்-தரும் உனதருமிசையே (2)
(MUSIC)
மனிதர்கள்-தன் வாழ்வில்-என்றும் நிம்மதி-இல்லே (2)
என்று-சொல்லி புழுங்கி-வந்தார் தன்னகத்திலே 
உந்தனிசைப் பாடல்-கேட்ட மாத்திரத்திலே 
குறைந்ததய்யா மனச்சுமையும் ஓர்-கணத்திலே
துன்பத்திலும் இன்பம்-தரும் உனதருமிசையே
(MUSIC)
குறையாத பணமிருக்கும் செலவழிக்கவே 
அங்கமெங்கும் பொன்-ஜொலிக்கும் சிலரிடத்திலே
அவை-யாவும் தந்திடாத நிம்மதி-ஒன்று 
நீ-கொடுத்தாய் உனதிசையாய் வெகுமதி-என்று
துன்பத்திலும் இன்பம்-தரும் உனதரும்-இசையே 
(MUSIC)
உலக-மாந்தர் நெஞ்சில்-என்றும் துயர்-இருந்தது 
அதைக்-குறைக்க தெய்வம்-உன்னை அனுப்பி-வைத்தது 
நீ-புனைந்த இசையை-அந்தோ தெய்வம்-கேட்டது
இன்னும்-என்ன இருக்கு-என்று அழைத்ததுக்-கொண்டது 
துன்பத்திலும் இன்பம்-தரும் உனதரும்-இசையே 
(MUSIC)
ஐயிரண்டு மாதம்-சென்றே பிள்ளை-பிறக்குது
அய்யா-உன் மெல்லிசையோ கணத்தில்-வருகுது
இசைத்தாயைப் பெற்றெடுத்த செல்வனல்லவோ 
நாதத்துக்கே நாதன்-விஸ்வ நாதனல்லவோ 
துன்பத்திலும் இன்பம்-தரும் உனதரும்-இசையே 
செவியில்-ஒரு அமுதம்-என்று உனதரும் இசையே
துன்பத்திலும் இன்பம்-தரும் உனதரும் இசையே