Saturday, August 5, 2017

23 அருவிகள் எனும்படி விழும்(அழகிய தமிழ் மகள் இவள்)





விருத்தம்

மூச்சுக்கும் இசை-ஒன்று பேச்சுக்கும் இசை-என்று தந்தாய் மன்னா-நன்கே
ஹோ ,,(Humming)
ராகங்கள் தினமேங்கும் உன்-பாட்டில் வரவேண்டும் என்றே உன்னைக் கண்டே
ஹோ ,,(Humming)

________________
அருவிகள் எனும்படி விழும்
இசை-இவரிடம் ஊற்றெடுத்..திடும்
வெள்ள..மென-அது பெருக்கெடுத்..திடும்
அதில்-நான் குளித்தேன் களிப்பால் குதித்தேன்
(Very Short Music)
அருவிகள் எனும்படி விழும்
இசை-இவரிடம் ஊற்றெடுத்..திடும்
வெள்ள..மென-அது பெருக்கெடுத்..திடும்
அதில்-நான் குளித்தேன் களிப்பால் குதித்தேன்

(MUSIC)

வானவர்கள் இன்னும் இன்னும்-என உண்ணும்
தேவமுதும் நாணும் மன்னரிசை முன்னம்
(2)
மன்னரிசைத் தென்றல் வீசுகிற சோலை
ஓர்-நொடியில் பாட்டை செய்து-தரும் ஆலை

(2)
இசையினில் இருப்பது ஸ்வரம்
அது இவரிடம் பெறுவது தரம்
அந்த ஆண்டவன் அளித்த-நல் வரம்
மகிழ்வில் உலகம் அதனால் திளைக்கும்

அருவிகள் எனும்படி விழும்
இசை-இவரிடம் ஊற்றெடுத்..திடும்
வெள்ள..மென-அது பெருக்கெடுத்..திடும்
அதில்-நான் குளித்தேன் களிப்பால் குதித்தேன்
(MUSIC)

ராகம் எழில் எழும் விதம்
தாளம் இதம் தரும் விதம்
(2)
தந்திட்டார் மன்னர் தந்திட்டார்

 யாரும் அடா..டடா-எனும்
வண்ணம் சதா-பெரும் இதம்
(2)
தந்திட்டார் மன்னர் தந்திட்டார்
இவரிசை தனியொரு சுவை
என்று இருக்குது பலரது உரை
நெஞ்சை சிறையிடும் இவரிசை தனை
கேட்கும் எவர்க்கும் இலை-ஊண் உறக்கம்

அருவிகள் எனும்படி விழும்
இசை-இவரிடம் ஊற்றெடுத்..திடும்
வெள்ள..மென-அது பெருக்கெடுத்..திடும்
அதில்-நான் குளித்தேன் களிப்பால் குதித்தேன்
(MUSIC)

பாடல் வரி உரைக்..கையில்
சேரும் இசை தனைக் கையில்
தந்திட்டார் மன்னர் தந்திட்டார்
 பாடல் வரி எதோ எதோ
இந்தா பிடி இசை இதோ
(2)
என்றே-தான் மன்னர்..
(PAUSE)
என்றே-தான் மன்னர் தந்திட்டார்
கவிகளின் அரசொரு புறம்
நல்ல இசைதரும் அரசெதிர்ப்புறம்
ஒரு சிலையென பலர்-மறு புறம்
அமர்ந்தார் இசைத்தார் இசைமேல் மிதந்தார்
அருவிகள் எனும்படி விழும்
இசை-இவரிடம் ஊற்றெடுத்..திடும்
வெள்ள..மென-அது பெருக்கெடுத்..திடும்
அதில்-நான் குளித்தேன் களிப்பால் குதித்தேன்





No comments:

Post a Comment