Wednesday, August 23, 2017

27 நாதம் உருவாகும் இறையோனிடம்(பார்வை யுவராணி கண்ணோவியம்)



நாதம் உருவாகும் இறையோனிடம்
வேதம் இதைத்-தானே பறை-சாற்றிடும்
சோகம் சென்றோட இசைபாடிடும்
உனைப்-பார் இசை-ராஜன் எனப்போற்றிடும்
நாதம் உருவாகும் இறையோனிடம்

வேதம் இதைத்-தானே பறை-சாற்றிடும்

(MUSIC)
யாரென்ன தந்தாலும் தேனென்று தந்தாலும் 
உன்பாட்டுக்கீடாகுமோ
(1+Short music+1)
யாரிங்கு வந்தாலும் நூறாண்டு சென்றாலும்
உன் பாட்டு போலாகுமோ
எந்த காதும் களிப்பாகும்  கண் மூடிடும்
எந்த நாளும் உன்கீதம் இசைகூட்டிடும்
நாதம் உருவாகும் இறையோனிடம்
வேதம் இதைத்-தானே பறை-சாற்றிடும்
(MUSIC)
கால்வண்ணம் அங்கென்று கைவண்ணம் இங்கென்று
கவிகம்பன் பண்பாடுமே
(1+Short music+1)
மால்வண்ணம் என்றாகும் ஸ்ரீராமன் திருமேனி  தனை-அந்த கவிசொல்லுமே
உன்னைப் பாட கவிகம்பர் எதைக்கூறுவார்
உந்தன்-மேனி அணுவுள்ளும் இசை-தானென்பார்
நாதம் உருவாகும் இறையோனிடம்
வேதம் இதைத்-தானே பறை-சாற்றிடும்
(MUSIC)
உன்-மெட்டு இழையோட என்-பாட்டில் உனைப்-பாட
யுகம்-யாவும் போதாதையா
நீ-தந்த இசைமெட்டில் யார்-மூழ்கிக் கிடந்தாலும் யுகம்-போதல் தெரியாதையா
என்-வேள்வி உன்-மெட்டில் பண்-செய்வதே
அதன்-மூலம் எந்நாளும் உனைச்சொல்வதே 
நாதம் உருவாகும் இறையோனிடம்
வேதம் இதைத்-தானே பறை-சாற்றிடும்
சோகம் சென்றோட இசைபாடிடும்
உனைப்-பார் இசை-ராஜன் எனப்போற்றிடும்
நாதம் உருவாகும் இறையோனிடம்





No comments:

Post a Comment