Saturday, September 2, 2017

31 மன்னா உ..னை-உரைக்க ஈடில்லையே(புல்லாங்குழல் கொடுத்த) **



மன்னா உ..னை-உரைக்க ஈடில்லையே
உந்தன் இசை-போல்-சுவை ஒன்று வேறில்லையே
(2)
மண்ணாளும் செல்வப் பெரும் ராஜாக்களே
உந்தன் இசைகேட்டு அதன் அடிமை ஆனார்களே
(2)
 மன்னா உ..னை-உரைக்க ஈடில்லையே
உந்தன் இசை-போல்-சுவை ஒன்று வேறில்லையே
(MUSIC)
கண்ணீர் வரத்-தகிக்கும் சோகங்களை 
வெல்ல மருந்தாகும் மன்னா-உன் கானங்களே
(2)
என்-போல இன்னும்-பல மாந்தர்களை 
பித்தன் உருவாகச் செய்யும் உன் பாடல்களே
பித்தம் தெளிவாக்க மருந்தும்-உன் பாடல்களே 
 மன்னா உ..னை-உரைக்க ஈடில்லையே
உந்தன் இசை-போல்-சுவை ஒன்று வேறில்லையே
(MUSIC)
ஓர்-பாடல் தன்னில்-பல தருகின்றவன் 
ஒரு நொடிப்-போதில் பல-பாடல் அருள்கின்றவன்
(2)
மழை-போல் -இசை-கணத்தில் பொழிகின்றவன்
சொல்ல ஈடொன்று இல்லாமல் திகழ்கின்றவன் 
இன்றும் ஈடொன்று இல்லாமல் திகழ்கின்றவன்
மன்னா உ..னை-உரைக்க ஈடில்லையே
உந்தன் இசை-போல்-சுவை ஒன்று வேறில்லையே
 (MUSIC)

அந்நாளில் கொடைக்காக கர்ணன்இருந்தான்  
அன்று பார்த்தனும் வில் திறனுக்கென்றே இருந்தான்
(2)
ஆண்டவனும் கானத்திற்கு ஒன்றே படைத்தான் 
நாம் கேட்பதற்கு மன்னரிசை என்றே படைத்தான் 
தான் கேட்பதற்கு மன்னரிசை உள்ளே புகுந்தான்
மன்னா உ..னை-உரைக்க ஈடில்லையே
உந்தன் இசை-போல்-சுவை ஒன்று வேறில்லையே
மண்ணாளும் செல்வப் பெரும் ராஜாக்களே
உந்தன் இசைக்-கடிமை என்றாகிப் போனார்களே
 மன்னா உ..னை-உரைக்க ஈடில்லையே
உந்தன் இசை-போல்-சுவை ஒன்று வேறில்லையே







No comments:

Post a Comment